வைராகியின் பாட்டு தனிமையில் ஓர் பயணம் தீர்ந்தது தாகம் முடிந்தது மோகம் பிறந்தது ஞானம் போவதற்க்கில்லை ஓரிடமும் தேடுதற்க்கில்லை ஓர்சுகமும் களைமிகு கால்களில் வலிமையில்லை நிறமில்லை கண்களில் வெளிச்சமில்லை வெறுமைகள் நிறைமனம் நினைப்பதில்லை வெறுங்குழல் உடலதில் வெறுமென அலைந்திடும் சிறுகாற்றலைகள், ஊதியில்லை அதில் நாதியில்லை சேர்ப்பதற்கில்லை ஒரு கனவும் சேருதற்கில்லை ஓருறவும் பட்டுப்போன நெஞ்சில் ஈரமில்லை களைகெட்ட உடலினில் உணர்வுமில்லை செவிகெட்ட பின்னால் சுருதியில்லை பசியில்லை அதனால் பஞ்சமில்லை ஐம்புலன் ஆட்டிடும் உடலதனாட்சியை ஒரு கிருமிகூட தீர்த்துவிடும் சூனியம் துவக்கும் சூனியம் முடிக்கும் இடைப்பட்ட நேரந்தான் வாழ்வு இடைவந்த தோற்றம் வெறுங்கானல் pic courtesy
Wow...lovely comparisions
ReplyDeleteWow...excellent
Delete