கரு பூக்கும் முன் நான் இல்லை
கல்லறையில் கரைந்த பின்னும் நான் இல்லை
இடை வந்த பொழுதில், உள்
இழுத்துவிடும் காற்றின் விசையில்
வடிவமாய் அலைந்து, முடிவினில்
நீள் படுத்த பிணமாய் மாறிவிடின்
நான் என்பது நிஜமா
காற்றென்பதோ நிஜம்
காற்று புகுந்து விளையாடி ஓய்ந்து
விட்டு சென்ற பொருளோ என் சடலம்
என்னுள் மலர்ந்து பின்
எனக்குள்ளே மடிந்து போன
கனவோ நான் கண்ட என் வாழ்க்கை
கனவுக்கும் மெய் கண்ட நனவுக்கும்
இடைதூரம் அறிவதுதான் ஞானமொ.

Yes you are 100% right my dear friend Krishnadas.
ReplyDeletethanks nambi
Delete