Skip to main content

கருணை

முகிலாய் நின்றனை 


குழலென மேல்விரித்த
குடை மட்டுமல்ல உன் உவமை  


அழல் கொண்ட நெஞ்சங்கள்
நெகிழ் நின்ற ஜென்மங்கள்
அலைபாயும் மானிடத்தின்
அவலநிலைக் கிறுதியென்று
உனக்குள்ளே பூத்திருக்கும்
சின்னஞ்சிறு நீர்த்துளிகள்
ஒவ்வொன்றும் ஒரு கனவு
கனல் கெட்டு வெறும் கரிபூசி நிற்பினும்
உள்ளுக்குள் உயிர்த்திருக்கும்
மின்பூச்சிகள்
ஒவ்வொன்றுமொரு நம்பிக்கையென
அதைச் சுமந்தொரு  

முகிலாய் நீ நின்றனை

பின்னொரு
மழையாய் பெய்தனை
அகலிடம்* அதன்மேலே
படிந்துள்ள துயரெலாம்
பொடியாக்கி  கலைத்தனை
உனக்குள்ளே கரைத்தனை
அதெயெல்லாம் சுமந்தொரு
விசையினில் பாய்ந்தனை
சிறு ஓடைகளெனச்சுமந்து
பெருநதியாயிப் புவிவிரிந்து பின்
துயரடங்கா கரும்கடலென கலந்தனை

துயர் துடைத்து நீ துலக்கிய மனவெளியில்
ஒரு கோடி புன்னகைகள் பூத்தெங்கும் ஒளிபரப்ப
நிறை நெகிழ்வில் நனவுலகில் கதிர் பரவும்
விதை பிளந்து பூ பூத்து
காய்பழுத்து கனியாகி பின் விதையாகி புத்துயிர்ப்பிறக்கும் 


நம்பிக்கைநீட்டியவர்க்கு பொய்க்காத வரம்கொடுக்க
மறுபடியும் நீ
முகிலாகி நின்றனை

*அகலிடம் : பூமி 


pic courtesy

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒருமை

நான் என்பதறியாமை நீ என்பதியலாமை நாமென்பதே புவிஇயக்கம் உறவின்றி அசையாது அணுவதுவும்  pic courtesy

வைராகியின் பாட்டு

வைராகியின் பாட்டு தனிமையில் ஓர் பயணம் தீர்ந்தது தாகம் முடிந்தது மோகம் பிறந்தது ஞானம்                 போவதற்க்கில்லை ஓரிடமும் தேடுதற்க்கில்லை ஓர்சுகமும் களைமிகு கால்களில் வலிமையில்லை நிறமில்லை கண்களில் வெளிச்சமில்லை வெறுமைகள் நிறைமனம் நினைப்பதில்லை வெறுங்குழல் உடலதில் வெறுமென அலைந்திடும் சிறுகாற்றலைகள், ஊதியில்லை அதில் நாதியில்லை         சேர்ப்பதற்கில்லை ஒரு கனவும் சேருதற்கில்லை ஓருறவும் பட்டுப்போன நெஞ்சில் ஈரமில்லை களைகெட்ட உடலினில் உணர்வுமில்லை செவிகெட்ட பின்னால் சுருதியில்லை பசியில்லை அதனால் பஞ்சமில்லை ஐம்புலன் ஆட்டிடும்  உடலதனாட்சியை ஒரு கிருமிகூட தீர்த்துவிடும் சூனியம் துவக்கும் சூனியம்  முடிக்கும் இடைப்பட்ட நேரந்தான் வாழ்வு இடைவந்த  தோற்றம்  வெறுங்கானல்   pic courtesy